ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பட்டம் வென்றது விதர்பா அணி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      விளையாட்டு
Vidarbha beat delhi 2018 1- 1

இந்தூர் : ராஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை விதர்பா அணி வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் முதல் முறையாக ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் கோப்பையை வென்றுள்ளது.

528 ரன்கள் குவிப்பு

டெல்லி - விதர்பா அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் குர்பானி, ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 7 விக்கெட்டுக்கு 528 ரன்கள் எடுத்தது.


டெல்லி திணறல்

நேற்று ஆட்டம் துவங்கியதும் மேற்கொண்டு 19 ரன்களை திரட்டிய விதர்பா அணி 547 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம், 252 ரன்கள் முன்னிலையை விதர்பா அணி பெற்றது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  76 ஓவர்கள் தாக்கு பிடித்த டெல்லி அணி 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எளிய இலக்கு...

இதையடுத்து, 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கிய விதர்பா அணி, ஒரு விக்கெட் இழந்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ராஞ்சி டிராபி தொடரில் முறையாக விதர்பா அணி வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து