முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கூடைப்பந்தாட்ட போட்டி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2018 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 18 வயதிற்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டி சோத்துப்பாறை அணை ரோட்டில் உள்ள மார்த்தாண்டபூபதி அவர்கள் அமைத்துள்ள  பாப் பவுன்டேசன் அகடமி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.   லீக் சுற்று ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் பிங், கிரீன், புளு மற்றும் ரெட் அணிகள் கலந்து கொண்டன. லீக் சுற்றின் இறுதி போட்டியில் புளு அணி 61-33 என்ற புள்ளி கணக்கில் கிரீன் அணியை தோற்கடித்து முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை கிரீன் அணியும், மூன்றாவது அணியை பிங் அணியும், நான்காவது இடத்தை ரெட் அணியும் பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் வரவேற்றார்.  கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட தலைவர் பி.டி.சிதம்பரசூரியவேலு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அகடமி உரிமையாளர் மார்த்தாண்டபூபதி நன்றி கூறினார். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாரிமுத்து, சிபி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து