முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையோர் மன்றங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்-இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  நேரு யுவ கேந்திரா விருதுநகர் மற்றும் அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் காரியாபட்டி ஒன்றிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகள் காரியாபட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
  இளைஞர்களுக்கு வாலிபால் , கபாடி , நீளம் தாண்டுதல் ,ஓட்டப்போட்டி 400மீ, பெண்களுக்கு கோ-கோ, ஓட்டப்போட்டி 100மீ , சிலம்பாட்டம் என 2 நாட்கள் நடைப்பெற்றது. நேற்று நடைப்பெற்ற கபாடி, வாலிபால் போட்டியினை நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் துணை இயக்குநர் சடச்சரவேல், காவல் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் வாலிபாலில் மேலேந்தல் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் முதல் பரிசை வென்றது, இரண்டாவது பரிசை ஆவியூர் லிட்டில் ஸ்டார் இளைஞர்   நற்பணி மன்றம் வென்றது. கபாடி போட்டியில் ஆவியூர் லிட்டில் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் முதல் பரிசை வென்றது, இரண்டாவது பரிசை காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் வென்றது. இந்நிகழ்ச்சியில் அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார், காரியாபட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ராஜா துரைசிங் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் பரிசுகளை வழங்கினார். நேரு யுவ கேந்திரா கணக்காளர் ரெங்கநாதன், சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர், தேசிய சிறந்த இளையோர் விருது பெற்ற விஜயராகவன், முதலமைச்சரின் சிறந்த இளைஞர் விருது பெற்ற உமையலிங்கம், உதவி தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டியன் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நடுவர்களாக பிச்சை, மோகன், மோகன் இருந்தனர்,தேசிய இளையோர் தொண்டர்கள் அழகுலெட்சுமி, ஜோதிமுத்து, ராமலிங்கம்; உட்பட இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து