பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக நிதி உதவிகள் செய்துவிட்டோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனை

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      உலகம்
trump 2017 12 31

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக  நிதி உதவிகள் செய்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேதனையுடன் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் ட்விட்டரில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான்
- அதிபர் டிரம்ப்

இந்த ஆண்டின் தன் முதல் ட்வீட்டிலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது என்று சாடியுள்ளார்.
கடுமையான வார்த்தைகளில் அமைந்த ட்வீட் இதோ:
கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான்.

ஆப்கானிஸ்தானில் நாம் தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது.என்று பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்டில் அவர் வெளியிட்ட புதிய தெற்காசிய கொள்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் கிடுக்கிப் பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து