முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் முதல் புத்தாண்டு டிவிட்டே இந்த வருடத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இடம் அளிப்பதாக வெளிப்படையாக அவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். மேலும் நாங்கள் கஷ்டப்பட்டு ஆப்கானிஸ்தானில் பிடிக்கும் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தான் சந்தோசமாக இடம் தருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இதற்கு எதிராக பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.

தற்போது அமெரிக்க இராணுவ ஜெனரல் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாகிஸ்தான் இன்னும் மாறவேயில்லை என்று அவர் கூறியுள்ளார். முன்பே தொடங்கிவிட்டது சரியாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்டது. அப்போதே பாகிஸ்தானுக்கு அளிக்க இருக்கும் பொருளாதார உதவிகளை நிறுத்த போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும் டிரம்ப் கிட்டத்தட்ட 225 மில்லியன் டாலர் உதவிகளை நிறுத்தி வைப்பார் என்றும் கணிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து அமெரிக்க இராணுவ தளபதி ஜான் நிக்கோல்சன் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''முன்பு பார்த்தது போலவே தான் பாகிஸ்தான் இப்போதும் இருக்கிறது. பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை. தீவிரவாதத்திற்கு எதிரான டிரம்ப்பின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு புரியவில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நன்மைக்காகத்தான் நாங்கள் செயல்படுகிறோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

 இதுகுறித்து மேலும் பேசிய அவர் ''அமெரிக்க அதிபரின் டிவிட் குறித்துதான் எல்லோரும் இப்போது பேசுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் எல்லோருமே பாகிஸ்தானிற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அதிகமாக இடம் கொடுக்கிறது'' என்று கோபமாக பேசி இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப், ''அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு பொதுவில் மக்கள் மத்தியில் பதில் அளிக்க நாங்கள் தயார். நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. அமெரிக்கா எங்களுக்கு அளிக்கும் உதவியை நிறுத்தும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். எனவே டிரம்ப்பின் டிவிட் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து