தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்தாக வாய்பில்லை: நிதின் கட்கரி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
NITIN 2018 01 02

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து புனேவில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
"தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும்.
- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

உலகம் முழுவதுமே, தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு, கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, 9 மணி நேரம் வரை ஆனது. ஆனால், தடையின்றி 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.


எனவே சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை . அடுத்த 5 ஆண்டுகளில் 83,677 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் திட்டம், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்'' என நிதின் கட்கரி கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து