டெல்லியில் பனிமூட்டத்தால் 300 விமானங்கள் தாமதம் ரயில் சேவைகளும் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
train

புதுடெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் நேற்று 300 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.

வடமாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. டெல்லியில் காலை 9 மணி வரையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 265 உள்ளூர் சேவைகளும் 67 சர்வதேச சேவைகளும் தாமதமாக இயக்கப்பட்டன. 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “விமான ஓடுபாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் காலை 7.30 மணி முதல் 9.30 வரை விமானங்கள் புறப்படவில்லை. சுமார் 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகே விமானங்கள் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது” என்றனர். இதேபோல டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் காலதாமதமாக இயக்கப்பட்டன. பனிமூட்டத்தால் டெல்லி சாலைகளில் காலை 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து