மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான இந்துத்துவா குழுவின் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
rahul 2017 09 07

புதுடெல்லி, மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான இந்துத்துவா குழுவின் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா நதிக்கரையில் பேஷ்வா பிராமணர் படையை வீழ்த்தியது மகர்கள் எனப்படும் தலித்துகள் படை. இந்த யுத்த வெற்றி நினைவுச் சின்னம் பீமா கோரேகானில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பீமா கோரேகான் நினைவு சின்னத்தில் லட்சக்கணக்கான தலித்துகள் திரண்டு மகர் படையினருக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதை தேசவிரோதம் என கூறி இந்துத்துவா குழுக்கள் தாக்குதல் நடத்தின.

இதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து மகாராஷ்டிராவில் தலித்துகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே தலித்துகள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தலித்துகள் இந்திய சமூகத்தில் கீழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் பாசிச எண்ணம். உனா, ரோகித் வெமுலா, இப்போது பீமா கோரேகான் ஒடுக்குமுறைக்கு எதிரான சின்னங்கள் என கூறியுள்ளார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து