டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கம் - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      தமிழகம்
edapadi-panneer 2017 8 22

சென்னை : தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 150 க்கும் மேற்ட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டனர்.  நீக்கப்பட்டவர்களுடன் அ.தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிவித்துள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கடசியில் இருந்து நீக்கபட்டு உள்ளனர்.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

காஞ்சிபுரம் - வேலூர்

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:


காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ. கோதண்டபாணி, வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் பொறுப்பிலும், குடியாத்தம் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் ஜெயந்தி பத்மநாபன், கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் மு.கதிர்காமு, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும். எதிர்கோட்டை சுப்பிரமணியன்.

சிவகங்கை - தூத்துக்குடி

சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் மாரியப்பன் கென்னடி, ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் முத்தையா, தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுந்தரராஜ், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் உமாமகேஸ்வரி அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீக்கம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து