புத்தாண்டு கொண்டாட்டம்: தானே சமைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த டெண்டுல்கர்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      விளையாட்டு
tendulkar 2017 2 26

புதுடெல்லி : கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு வாழ்த்துகளோடு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். சச்சின் சமைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். புத்தாண்டில் தனது நண்பர்களுக்கு தனது கைகளால் சமைத்து விருந்தளித்தார்.

வாழ்த்துகள்...

அந்த வீடியோவில், சச்சின் பார்பெக்யூவில் இறைச்சியை சமைக்கிறார். அதில் இருந்து வரும் புகையால் கண்ணீர் வருவதையும் பொருட்படுத்தாமல் சச்சின் சமைத்து தனது நண்பர்களுக்கு கொடுத்தார். வீடியோவுடன், 'அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் எனது நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் உணவை விரும்பி உண்டனர். இந்த ஆண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள். நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்' என செய்தியையும் சச்சின் தெரிவித்துள்ளார்.


வைரலாகிறது

சச்சின் வெளியிட்ட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சச்சின் சென்ற ஆண்டு ராஜ்ய சபாவில் உரையாற்ற முடியாததால், தனது உரையை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து