தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக விக்கெட்: புதிய சாதனையை நோக்கி ஸ்டெயின்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      விளையாட்டு
steyn 2018 1 2

கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இன்னும் 5 விக்கெட்டுகள்...

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் அணிக்கு திரும்பியுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்ட ஸ்டெயின் 14 மாதங்களுக்கு பிறகு விளையாட உள்ளார். தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் முதலிடத்தை பிடிக்க ஸ்டெயினுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை. அவர் 85 டெஸ்டில் விளையாடி 417 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.


பொல்லாக் முதலிடத்தில் ...

முதல் இடத்தில் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் 198 டெஸடில் 421 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டெயின் புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட அவரது பந்துவீச்சு எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. இருந்த போதிலும் அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து