அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் என்னிடமும் உள்ளது வடகொரியா அதிபருக்கு டிரம்ப் பதிலடி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      உலகம்
trump kim 2018 01 03

வாஷிங்டன்: என்னிடமும் அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் உள்ளது. அது வடகொரிய பொத்தானைவிடப் பெரியது, சக்தி வாய்ந்தது என்று அந்நாட்டு அதிபர் கிம்மிடம் யாராவது கூறுங்கள்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகொரியாவின் அதிபர் கிம் தன் மேஜையின் மீது அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் தயராக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவரிடம் யாராவது கூறுங்கள் என்னிடமும் அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் உள்ளது. அது மிகப் பெரியது, அதிக சக்தி வாய்ந்தது. அது வேலை செய்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

"அணுஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் என்னிடமும் உள்ளது. அது வடகொரிய பொத்தானைவிடப் பெரியது, சக்தி வாய்ந்தது, இதனை  அதிபர் கிம்மிடம் யாராவது கூறுங்கள்" என்றார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப்

முன்னதாக தென் கொரியா - வடகொரியா பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ஐ. நாவுக்கான அமெரிக்க தூதர், வடகொரியா அதன் அணுஆயுத சோதனைகளை நிறுத்துவரை பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.


புத்தாண்டு கொண்டாட்ட உரையில்...
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் பேசும்போது, "அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது.

எனது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.

வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை." என்று கூறியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். வடகொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து