தென் அமெரிக்க நாடான பெருவில் பஸ் கவிழ்ந்து விபத்து: 48 பேர் பலி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      உலகம்
PERU-CRASH 2017 01 03

பெரு: தென் அமெரிக்க நாடான பெருவில் பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பெரு போலீஸ் தரப்பில், "பெருவில் 57 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பெரிய பள்ளத்தில் சரிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 48 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ வெளியிட்ட அறிக்கையில்,
"இந்த விபத்து பெரும் வருத்தத்தை அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.தென் அமெரிக்க நாடான பெருவில் பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.


விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.பெருவில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து