அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' அறிமுகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பார்லி.யில் தகவல்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      இந்தியா
arun jetley 2017 7 23 0

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' தொடர்பான முக்கிய தகவல்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் தெரிவித்தார்.

பத்திரங்கள் அறிமுகம்
இந்த நிலையில்தான், மத்திய அரசு தேர்தல் நிதிப் பத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, அருண் ஜெட்லி லோக்சபாவில் கூறியதாவது:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை, குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் கூட நினைத்த நேரத்தில் எல்லாம் நிதி கொடுக்க முடியாது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும்.


அதேநேரம், பொதுத் தேர்தல் நடைபெறும் வருடத்தில், மாதத்தில் 30 நாள்களுக்கு இந்த பத்திரங்களை வாங்கிக்கொள்ள முடியும். பத்திரத்தை வாங்கியதும் 15 நாள்களில் பணத்தை செலுத்திவிட வேண்டும். 15 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். ரூ.1,000 கட்டணத்தில் பத்திரங்கள் ஆரம்பமாகின்றன. ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகிய மடங்குகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும். கருப்பு பணம் வராது வாடிக்கையாளர் விவரங்களை அளித்த பிறகு இந்தப் பத்திரங்களை வாங்க முடியும் என்பது வங்கி விதிமுறை. ஆனால், பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் இடம்பெறாது என்பதால் ரகசிய காப்பு பற்றி பயப்பட தேவையில்லை என்றார். தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பதால் இந்திய குடிமக்களும், இந்திய நிறுவனங்களும் மட்டுமே பத்திரங்களை வாங்க முடியும். கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றம் அல்லது சட்ட சபை பொதுத் தேர்தலில் 1 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மட்டுமே பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற முடியும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து