முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசியலை ஆட்கொள்ள ஆன்மிகம் மட்டும் போதாது மலேசியா துணை முதல்வர் அறிக்கை

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் விரிவான, விமர்சன அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 31 டிசம்பர் 2017 அன்று, தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார், திரைப்பட்ட நட்சத்திரம் ரஜினிகாந்த், தாம் அரசியல் கட்சி ஆரம்பித்து 2021-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திரைத்துறையில் இருந்து சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவற்றில் பல வெற்றிப்படங்கள். ரஜினியின் கபாலி திரைப்படம், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து தமிழர்களிடம் பாராட்டை பெற்றதோடு, 100 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் வசூலை குவித்தது. இந்தியாவின் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகரில் ரஜினி ஒருவர். தமிழகத்தின் சென்னையில் இருந்துதான் இவர் இந்த புகழை அடைந்தார். சுமார் இரு தசாப்தங்களாக, அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்ற இழுபறியான நிலையில் இருந்த ரஜினி, இறுதியாக, அரசியல் நிலையற்றத்தன்மையை மாற்றி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

தனது அரசியல் பயணம் சாதி, மத பேதமற்ற "ஆன்மிக அரசியல்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, தமிழகம் உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களில் தனது இருப்பை நிலைக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவந்துள்ளது திட்டமிடப்பட்டதா, அல்லது எதேட்சையாக நடந்ததா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் வேருன்ற, பாஜக-விற்கு தமிழகத்தில் கூட்டணி நண்பர்கள் வேண்டும் என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது.

ரஜினியும், பாஜகவும் கூட்டணி சேர்வார்களா என்பது, போக, போகத்தான் தெரியும். பாஜக முன்னெடுத்து செல்லும் மதவாத அரசியலும், ரஜினி முன்வைக்கும் "ஆன்மிக அரசியலுக்கும்" நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதேவேளையில், அரசியல் அனுபவம் குறைவான, தமிழரல்லாத ரஜினி, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ராமசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து