இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      விளையாட்டு
eng-aus ashes final test 2018 1 3

சிட்னி : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை கைபற்றியது

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 5 போட்டி கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் 120 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 41 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது.

கடைசி டெஸ்ட்...

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால் ஆறுதல் வெற்றி பெற கடுமையாக போராடும். அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் தொடரை இழந்தது. ஆனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக காணப்படுகிறது. கேப்டன் ஸ்டீபன் சுமீத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இத்தொடரில் அவர் 3 சதம் அடித்து உள்ளார். பந்துவீச்சிலும் பலம் வாய்ந்து உள்ளது.

44 ரன்கள் தேவை...

கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலிஸ்டயர் கூக் 12 ஆயிரம் ரன்னை நெருங்குகிறார். அவர் 151 டெஸ்டில் 11 ஆயிரத்து 956 ரன் எடுத்து உள்ளார். 12 ஆயிரம் ரன்னுக்கு இன்னும் 44 ரன்னே தேவை. கடைசி டெஸ்டில் அவர் 12 ஆயிரம் ரன்னை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து