தென்ஆப்பிரிக்க ஆடுகளம் குறித்து கவலை இல்லை - முன்னணி வீரர் புஜாரா பேட்டி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      விளையாட்டு
pujara 2018 1 3

கேப்டவுன் : தென்ஆப்பிரிக்க ஆடுகளம் வேகப்பந்துக்கு ஏற்ற வகையில் இருப்பதால் நாங்கள் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னணி வீரரான புஜாரா தெரிவித்துள்ளார்.
நாளை தொடங்குகிறது

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெளிவாக இருக்கிறோம்


தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் (பிட்ச்) வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து அதிகமாக எகிறக்கூடிய இந்த ஆடுகளம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது மாதிரியான பிட்சில் எங்களால் விளையாட இயலும். சிறப்பாக விளையாடுவதில்தான் எங்களது கவனம் இருக்கும். எப்படி திட்டமிட்டபடி விளையாடுவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எந்தவிதமான ஆடுகளத்தில் ஆடுவதற்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்.

மிகவும் முக்கியமானது...

அனுபவம் மிகவும் முக்கியமானது. இதுமாதிரியான ஆடுகளத்தில் விளையாடி இருந்தால் ரன்களை சேர்க்க முடியும். வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் பேட்டிங் தொழில் நுட்பத்தையும், மன உறுதியையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பந்து வரும் திசையை கணித்து ஆடுவது மிகவும் முக்கியமானது. நான் 2 முறை தென் ஆப்பிரிக்காவில் ஆடி இருக்கிறேன். இதனால் இங்குள்ள பிட்சில் எப்படி ஆடுவது என்பது நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் டிராவிட்டின் இடமமான 3-வது வரிசையில் புஜாரா விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தில் அவர் ஜோகன்ஸ்பர்க் மைதானததில் 153 ரன்கள் குவித்தார். தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் 3-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து