முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து அணி

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை இழந்தபோதும், ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தினால் சரிவில் இருந்து மீண்டது.

மழையால் தாமதம்
ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.  காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் மாசன் கிரேன் அறிமுக வீரராக இறங்கியுள்ளார். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. குக்கும் ஸ்டோன்மேனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். குக், 39 ரன்னில் ஹசல்வுட் பந்துவீச்சிலும் ஸ்டோன்மேன் 24 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும் வீழ்த்தினர். அடுத்த வந்த வின்ஸும் 25 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணி 95 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரூட்டும், மலனும் ஆடி வருகின்றனர்.

ரூட் அரை சதம்
மற்றொரு தொடக்க விரர் அலிஸ்டயர் கூக் இன்னும் 47 ரன் எடுத்தால் 12 ஆயிரம் ரன் கடப்பார் என்ற நிலையில் விளையாடினார். ஆனால் அவர் 39 ரன்னில் ஆவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னாக இருந்தது. அதன்பின்னர் ஜோ ரூட்டுடன், மலன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடியதுடன் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரூட் அரை சதம் கடந்தார். மலனும் அரை சதத்தை நெருங்கினார். இவர்கள் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அணியின் ஸ்கோரும் 200 ரன்னைத் தாண்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து