முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ரியாத்: ரியாத் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பிளிட்ஸ் செஸ் ...
சவுதி அரேபியாவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இதையடுத்து பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு 15 நிமிடங்களும், கூடுதலாக ஒவ்வொரு நகர்த்தலுக்கும், 10 விநாடிகளும் அளிக்கப்படும். அதே நேரத்தில் பிளிட்ஸ் போட்டியில், மூன்று நிமிடங்களும், ஒவ்வொரு நகர்த்தலுக்கு, 2 விநாடிகளும் அளிக்கப்படும்.

வெண்கலம்....
இந்நிலையில், ரியாத் நகரில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டார். இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.விஸ்வநாதன் ஆனந்த் 21 சுற்றுகளில், ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வி சந்தித்து, 14.5 புள்ளிகள் எடுத்து, மூன்றாவது இடத்தை ஆனந்த் பிடித்தார்.

11 ஆட்டங்கள்
உலக கிளாசிக் செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். ரஷியாவின் செர்கே கர்ஜாகின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்த், முதல் நாளில், 11 ஆட்டங்களில் 7 புள்ளிகளைப் பெற்றார். இரண்டாவது நாளில், 10 ஆட்டங்களில், 7.5 புள்ளிகளைப் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து