முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் புதுவையிலிருந்து சிங்கிரிகுடி கோவிலுக்கு பாதயாத்திரை 7-ந் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      புதுச்சேரி

ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள்ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் !ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகுடி  கோவிலுக்கு புனித யாத்திரை புறப்படும்.அதன்படி 22ம் ஆண்டு புனித யாத்திரை வரும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில்தொடங்குகிறது.

புனித யாத்திரை

திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் மங்காசாசனம் செய்து யாத்திரையை தொடங்கி வைக்கிறார். வேளுக்கடி கிருஷ்ணன் சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார்.  பாதயாத்திரையில் குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிகர பஜனை மடத்தின் சார்பில் ஸ்ரீகிருஷ்ணர் சுவாமி ரதம், பாண்டுரங்கா ரகுமாயி சுவாமி ரதம் ஆகியவை பங்கேற்கும். கவிக்குயில் ஸ்ரீவேங்கடாஸ்ரீ பஜனைக்குழு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினரும் பங்கேற்கின்றனர்.  யாத்திரை கடலூர் சாலை வழியாக சிங்கிரிகுடி  கோவிலை அடையும். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்க உளனர். யாத்திரை முடிவடையும் சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மர் கோவில் பெருமாளுக்கு பூஜித்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். யாத்திரையையொட்டி வைசியாள் வீதி வாசவி திருமண மண்டபத்தில் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு பிராட்டியின் பெருமை என்ற தலைப்பில் நம்மாழ்வார் சபையை சேர்ந்த ஆஷா நாச்சியாரின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. 7-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்கரிகுடி கோவிலில் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை நிகழ்ச்சியும், இள.சரண்யாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், கவுரவ தலைவர்கள் பக்தவச்சலம், பூவராகவன், ஜெயபிரகாஷ், துணை தலைவர்கள் ராமமூர்த்தி, நம்பிராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து