விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், உள்ள கிராமத்தில் வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை மக்களைத் தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பிரதி வாரம் ஒரு ஊராட்சியில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வருவாய்த்துறையின் சார்பில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

அம்மா திட்ட முகாம்

மக்கள் பேருந்து ஏறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதால் ஏற்படும் நேரம், செலவு, வேலை இழப்பு ஆகியவற்றை போக்குவதற்காக உங்கள் ஊராட்சிக்கே வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் வந்து குறைகேட்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.ம்மா திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல் (உட்பிரிவு மற்றும் முழு நிலம்), உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குட்பட்ட நிலத் தாவாக்கள், முதல் பட்டதாரி சான்றிதழ், விதவைச்சான்றிதழ், குடிநீர், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களையும் இந்த முகாமில் பொதுமக்கள் அளித்து, பயன்பெறுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  கேட்டுக் கொண்டார்.வரும் பிரதி வெள்ளிக்கிழமை (05.01.2018) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: விழுப்புரம் வட்டம் விழுப்புரம் குறுவட்டத்தைச் சேர்ந்த ஆலத்தூர் கிராமம், வானூர் வட்டம் கிளியனூர் குறுவட்டத்தைச் சேர்ந்த காட்ராம்பாக்கம் கிராமம், விக்கிரவாண்டி வட்டம் சித்தலம்பட்டு குறுவட்டத்தைச் சேர்ந்த சிறுவள்ளிக்குப்பம் கிராமம், திண்டிவனம் வட்டம் இரட்டணை குறுவட்டத்தைச் சேர்ந்த முப்புள்ளி கிராமம், செஞ்சி வட்டம் சத்யமங்கலம் குறுவட்டத்தைச் சேர்ந்த பாடிபள்ளம் கிராமம், மேல்மலையனூர் வட்டம் சாத்தாம்பாடி குறுவட்டத்தைச் சேர்ந்த வடவெட்டி கிராமம், திருக்கோவிலூர் வட்டம் மணலூர்பேட்டை குறுவட்டத்தைச் சேர்ந்த குலதீபமங்கலம் கிராமம், உளுந்தூர்பேட்டை வட்டம் அரசூர் குறுவட்டத்தைச் சேர்ந்த அரும்பட்டு கிராமம், கள்ளக்குறிச்சி வட்டம் நாகலூர் குறுவட்டத்தைச் சேர்ந்த காச்சக்குடி கிராமம், சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் குறுவட்டத்தைச் சேர்ந்த பாசார் கிராமம், சின்னசேலம் வட்டம் வெள்ளிமலை குறுவட்டத்தைச் சேர்ந்த நொச்சிமேடு கிராமம், மரக்காணம் வட்டம் மரக்காணம் குறுவட்டத்தைச் சேர்ந்த கீழ்பேட்டை ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்துள்ளார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து