விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விழுப்புரம்
viluppuram collector

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான நெறிபடுத்தும் குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில் நடைபெற்றது

குழு கூட்டம்

இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக பெறப்படும் மனுக்களை அரசாணை.540-ன்கீழ் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடிவு செய்து, விரிவான ஆணை பிறப்பித்திட வேண்டும் எனவும், இவ்இனங்களில் நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு ஆளாகாத வகையில் கவனமுடன் செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள மனுக்களை இரண்டு மாத கால அவகாசத்திற்குள் முடிவு செய்திட வேண்டும் எனவும் கலெக்டர்  அறிவுறுத்தினார்.    மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களிலும் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களிலும் எவரும் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்திடாமல் கண்காணித்திட வேண்டும் எனவும் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இக்கூட்டத்தில், திண்டிவனம் சார் ஆட்சியர் செல்வி.மெர்சிரம்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி (விழுப்புரம்), மல்லிகா (கள்ளக்குறிச்சி) மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து