பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி ஆலய அன்னதானக்குழு வேணுகோபால் எம்.பி, பலராமன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தனர்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      சென்னை
mp start the ponneri annathanam

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரும்பேட்டில் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது.பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 20 பேர் கொண்ட ஆலயத்தின் அன்னதானக்குழு துவக்கவிழா நடைப்பெற்றது.

ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அண்ணா.தி.மு.கவின் கழக மருத்துவ அணிச்செயலாளரும்,நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும்,திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வேணுகோபால்,திருவள்ளுர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் ஆகியோர் கலந்துக்கொண்டபின் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் அண்ணா.தி.மு.க நிர்வாகிகள் ஆறுமுகம்,பானுபிரசாத்,பெரும்பேடு சீனிவாசன்,கம்மாவார்பாளையம் ராதாகிருஷ்ணன்,கொண்டக்கரை அமிர்தலிங்கம்,கோளூர் கோதண்டன்,ஆமூர் தன்சேகர்,கடப்பாக்கம் ராஜா,அத்திப்பட்டு புதுநகர் பிரபாகரன்,சோம்பட்டு முனுசாமி,பெரும்பேடு நிர்வாகிகள் தண்டபாணி,பி.கே.மணி,கதிரேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து