முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையம் பேரூராட்சியை திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற பேரூராட்சியாக தீவிர பணிகள்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - அய்யம்பாளையம் பேரூராட்சியில் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற பேரூராட்சியாக தீவிர பணிகள்  நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய், திண்டுக்கல் மண்டலம் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் அய்யம்பாளையம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் தனிநபர் கழிப்பறை திட்டம் அதாவது திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற பேரூராட்சியாக  செயல்படுத்துவதற்காக அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் தலைமையில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியில் 295 மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 232 தனிநபர் கழிப்பறைகள் முழமையாக சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. மீதமுள்ள கழிப்பறைகள் விரைவாக சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது வருகிற ஜனவரி 15ம் தேதிக்குள் அனைத்தும் சிறப்பாக முடிக்கப்பட்டு திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற பேரூராட்சியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெறுவதாக செயல் அலுவலர் சரவணக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து