ரஜினிக்கு முதல்வராகவே முடியாது: கன்னட ஜோதிடரின் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      சினிமா
rajini 2017 12 30

பெங்களூர், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கூறியதாவது:-
 
ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்னம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது. அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரது ராசிப்படி வருகிற எம்.பி. தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. எனவே எந்த உயரத்துக்கு சென்றாலும் அந்த தோஷம் ஒருவரை கீழே இழுத்து கொண்டு வந்து விடும்.

எதிர்ப்புகள் வரும்

எனவே ரஜினிகாந்த் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க கூடாது. கட்சி தலைவராக மட்டுமே இருப்பது நல்லது. ஒரு கிங் மேக்கராகவே அவர் இருக்க வேண்டும். அவர் கூறும் நபரையே முதல்வராக்க வேண்டும். அரசியலில் அவருக்கு எதிர்ப்புகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


சரியான கணிப்பு

குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கணிப்பை வெளியிட்டிருந்தார். அதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் இழுபறியாக வந்தாலும் கடைசியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து