இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் வேட்டி தினவிழா

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      திருநெல்வேலி
ilanji bharath school dhoti day

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெடரிக் மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினவிழா நடைபெற்றது. பள்ளியின் முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் உஷா ரமேஷ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் தொன்மையான பாரம்பரிய பழக்கமான வேட்டி உடுத்தும் முறையை வலியுறுத்தி வேட்டி அணிந்து வந்திருந்தனர். மாணவர் அன்புச்செல்வன் வேட்டி தினம் பற்றித் தமிழில் உரையாற்றினார். பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் பேணிக்காக்கும் வண்ணமாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து