நாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் .சீ.சுரேஷ்குமார், ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் அரசுப் பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லா வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி அரசுப் பேருந்துகளை இயக்க கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பொது இடங்களிலும், அனைத்து அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளிலும், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பேருந்துகள் மற்றும் இதரப் போக்குவரத்து வாகனங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீதும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.;." என தெரிவித்தார்.

இநத ஆய்வின் போது நாகப்ட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ம.கண்ணன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்(நாகப்பட்டினம்) கோட்ட மேலாளர்(பொ) சிதம்பரகுமார், கிளை மேலாளர் செந்தில்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு,மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து