குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மத்திய உயர்மட்ட குழு அலுவலர்கள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      கன்னியாகுமரி
kanyakumari Refugees camp visit collector

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  வருகை தந்த, இலங்கை அகதிகள் முகாமிற்கு, நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய உயர்மட்ட குழு அலுவலர்கள்    பிரஸன்ஜித்  தேவ், (இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சகம்),  சதீஷ்குமார் சிங் (சார்பு செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம்) மற்றும்  ஸ்ரீநிவாசன் (பிரிவு அலுவலர், மத்திய உள்துறை அமைச்சகம மற்றும் சென்னை மறுவாழ்வுத்துறை இயக்குநரக துணை இயக்குநர்  என்.தியாகராஜன் ஆகியோர், கோழிவிளை, ஞாறான்விளை மற்றும் பழவிளை ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

ஆய்வு

பின்னர், கலெக்டர்   சஜ்ஜன்சிங் ரா.சவான்  முன்னிலையில், கன்னியாகுமரி பெருமாள்புரம் முகாமில் பராமரிக்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய நுழைவு பதிவேடு, பணக்கொடை வழங்கும் பதிவேடு, முகாம் இயக்கப்பதிவேடு ஆகிய பதிவேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, முகாமில் உள்ள நபர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர்  சோ.இளங்கே, கூடுதல் ஆட்சியர்  ராஹ_ல்நாத்  நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்  இரா. ஜானகி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்  சஜீத், விளவங்கோடு வட்டாட்சியர்  கண்ணன்,               தனி வட்டாட்சியர் (இலங்கை அகதிகள் முகாம்)  விஜயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து