பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் : அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      பெரம்பலூர்
pro pm

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளருமான அபூர்வவர்மா , மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டம்

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று (5.1.2018) மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளருமான அபூர்வவர்மா தலைமையில், மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, சுகாதாரதத்துறை, கூட்டுறவுத்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை என அனைத்து துறைகளின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டப்பணிகள் குறித்த விபரங்களையும், திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறைவாரியாக விரிவாக கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்கள். வேளாண்துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, விரிவாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பளவு குறித்தும், பயிர் வகைகள் குறித்தும், மேலும் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள், உரங்கள் இருப்புக் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விவசாய நிலங்களை மேம்படுத்தும் வகையில் மண்பரிசோதனை செய்யப்பட்டு வரும் வபரங்கள் குறித்தும், மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், .கா.., மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட திட்ட இயக்குநர்; (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன், கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குநர் மரு.செங்கோட்டையன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.செல்வராஜன், துணை இயக்குநர் மரு.சம்பத் உள்ளிட்ட அனைத்துத்துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து