அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      கடலூர்
mla isssue welfare scheme

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு  வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இதில்  கண்டரக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 36 பயனாளிகளுக்கும், கள்ளிப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கும் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையை வழங்கினார்.42 ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள் முழுமையாக எரிய வேண்டும், சாலைகள் சீரமைப்பு தொடர்ச்சியாக நடைபெற வேண்டும், திருமண நிதி உதவியும், மகப்பேறு நலத்திட்டங்கள் உரிய காலத்திற்கு சம்பந்தபட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பனவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ், கிருஷ்ணகுமார் முன்னால் ஒன்றிய சேர்மன் சுந்தரி முருகன், கவுன்சிலர் சங்கர், கௌரி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து