வேலூர் மாவட்டத்தில் கோடி மதிப்பில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 930 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      வேலூர்
ph vlr mini 2

2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளையும் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட விலையில்லா பொங்கல் பரிசு பொருட்களையும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

 விலையில்லா வேட்டி சேலை

 

 

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை வகித்தார்.வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது.தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்ற மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் எண்ணப்படி ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு விலையில்லா வேட்டி சேலைகளையும் விலையில்லா பொங்கல் பரிசு பொருட்களையும் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 கோடியே 84 லட்சத்து 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 7 லட்சத்து 20 ஆயிரத்து 069 பயணாளிகளுக்கு விலையில்லா சேலைகளும் 7 லட்சத்து 20 ஆயிரத்து 082 பயணாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் 8 லட்சத்து 98 ஆயிரத்து 930; குடும்ப அட்டைதாரர்களுக்கு 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 2அடி கரும்பு, 20கிராம் முந்திரி. 20கிராம் திராட்சை, மற்றும் 5கிராம் ஏலக்காய் ஆகியவைகள் அடங்கிய ரூ.112 மதிப்புடைய பொங்கல் பரிசு பொருட்கள் 1824 நியாயவிலைக்கடைகளில் இன்று முதல் பொங்கல் பண்டிகை வரை வழங்கப்படுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உணவு, உடை மற்றும் உறைவிடம் கிடைக்க வேண்டும் என்று பல திட்டங்களை தீட்டினார். அவரது வழியில் வந்த புரட்சிதலைவர் எம்.ஐp.ஆர் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் விலையில்லா வேட்டி சேலை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை உருவாக்கினார்கள். புரட்சிதலைவர் அவர்களின் வழி தோன்றலான மறைந்த முதல்வர் அம்மா உலகமே வியக்கும் அம்மா உணவகம், கர்பிணிகளுக்கு சத்தாண உணவு வழங்கும் வகையில் நிதியுதவி ஆலோசனை, பிறந்த குழந்தைகளுக்கான அம்மா பெட்டகம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்தினார்கள். இதுபோன்று அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அரசும் திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள எழை எளிய மக்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை பெற்று தித்திக்கும் தை திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் எனறு வணிகவரித்துறை அமைச்சர் விழாவில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐp.லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, வருவாய் கோட்டாட்சியர் செல்வராசு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஐp.விஐயன், மொத்த பண்டகச்சாலை தலைவர் டி.ராஐh, அச்சக தலைவர் மோகன், துணை பதிவாளர் பொது விநியோகம் திட்டம் முனிராஐp, குடியாத்தம கூட்டுறவு சங்க தலைவர் Nஐ.கே.என்.பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு, மாவட்ட வழங்கல் அலுவலர் nஐயக்குமார், குடியாத்தம் வட்டாட்சியர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணி, மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து