இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      வேலூர்

இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா பிரதேச மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சங்க மாநாட்டின் பொதுக்குழு கூட்டத்தில் இவர் இந்த ஆண்டிற்கான ( 2018 ) சங்கதலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின்றி தேர்வு

 

இந்திய நாடு பொருளாதார துறையில் வளர்ச்சி கண்டு உலக அரங்கில் இந்திய நாடு வளமிக்க பொருளாதார நாடாக மாறுவதற்கு வேண்டிய உதவிகள் ஆலோசனைகள் அரசுக்கு வழங்கும் வகையில் இந்திய பொருளாதார சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதல் பேராசிரியரும் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய முனைவர் கில்பர்ட் என்பவர் 1917 ஆண்டு மும்பை மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெர்ஸி ஆன்ட்சே கொல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசியர் சி.ஜே.ஹாமில்டன் ஆகியோருடன் இணைந்து இந்த இந்திய பொருளாதார சங்கத்தினை உருவாக்கினார்.

இச்சங்கத்தின் தலைவர்களாக இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர்கள் முனைவர் அமர்த்யாசென் லன்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ் இயக்குநரும் நோபல் விருது பெற்றவருமான முனைவர் ஜி.பட்டேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முனைவர் வி.கே.ஆர்.வி.ராவ் முனைவர் மால்கம் எஸ்.ஆதிஷேய்யா முனைவர் யசோதா சண்முக சுந்தரம் ஆகியோர் இருந்துள்ளனர்.

ஜனாதிபதி பங்கேற்பு

சங்கத்தின் முதல் நூற்றாண்டு விழா மற்றும் நூற்றாண்டின் சங்கத்தின் முதல் மாநாடு அண்மையில் 4 நாட்கள் ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜீனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் மேதகு ராம்நாத் கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்திய பொருளாதார சங்கத்தின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பான பொருளாதார நிலையை உருவாக்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் மேம்பாடு அடையும் வகையில் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்றார்.

விஐடி வேந்தர் பேச்சு

 

விழாவிற்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியாதவது: நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் உருவாக தூய்மையான அரசியல் முறை வேண்டும் .அதற்கு ஏற்ற வகையில் அரசியல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் .அதற்கு உதவும் வகையில் இந்திய பொருளாதார சங்கம் உறுதுணையாக இருந்து செயல்படும் என்றார்.

இதில் ஆந்திரா மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் முதல்வர் சந்திபாபு நாயுடு கிராமின் வங்கி நிறுவனரும் அமைதிக்கான நோபல் விருது பெற்றவருமான முகம்மது யூனுஸ் இந்திய ரிசர்வு வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆலோசகருமான மலேசிய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜோமோவானே சுந்தரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.அதை தொடர்ந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் இந்தாண்டிற்கான தலைவராக விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாநாடு பிகார் மாநிலம் புத்த கயாவில் நடைபெறுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து