நங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      சேலம்
1

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சிப்பணிகள்

 தமிழக முதலமைச்சர் சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக பல எண்ணற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சானார்பட்டியில் தாய் திட்டத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கணக்கன் ஏரி தூர்வாரி, ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பெரியசோரகையில் செங்குட்டை முதல் நைநானூர் வரை ரூ.13.30 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் மற்றும் தாசகாபட்டியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமூதாய கூட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

மக்கும் குப்பைகள்

பெரியசோரகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.24.45 மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணிகளையும் தொடர்ந்து ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் அசோலா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்கள்.

இந்த ஆய்வின் போது மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ., ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சாய்ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து