கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி. கதிரவன், தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெ. கல்யாணி அனைவரையும் வரவேற்றார். முதன்மை குற்றவியல் நடுவர் (பொறுப்பு) ஜெயஸ்ரீ மற்றும் குற்றவியல் நடுவர். ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ஆய்வு

இக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக சென்ற குழு கூட்ட தீர்மானங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட மாவட்ட ஆய்வு குழு அனைத்து குழந்தைகள் இல்லங்களையும் ஆய்வு செய்து அறிக்கையை 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்க உத்திரவிட்டார். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுகளை பலப்படுத்த அதிக அளவில் தன்னார்வலர்களை இணைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அடுத்ததாக பேசிய முதன்மை குற்றவியல் நடுவர் (பொறுப்பு) ஊ. ஜெயஸ்ரீ இளம் வயது திருமணம் செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய குற்றவியல் நடுவர் ஜெயபிரகாஷ் அனைத்து காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையங்களில் பொதுமக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டோர்

இறுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) க. சுபாஷ் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவம்), முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், குழந்தைகள் நலக் குழும தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர், நம்பிக்கை இல்லம், ஐஏனுP மற்றும் ஆற்காடு ஆகிய தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் மற்றும் சைல்டு லைன் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டானர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து