பொங்கலுக்கு இலவச பொருட்கள் வழங்க கவர்னர் அனுமதி அளிக்க மறுப்பு- புதுவை அரசு அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      புதுச்சேரி

புதுவையில் ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு இலவசமாக பொருட்கள் வழங்கப்படுவது உண்டு. இதன்படி தீபாவளிக்கு 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும். பொங்கலுக்கு பச்சரிசியுடன் மேலும் வெல்லம்; உள்ளிட்ட 6 பொருட்கள் வழங்கப்படும்.

அனுமதி மறுப்பு

இலவச பொருட்கள்வழங்க வேண்டும் என்றால் அதற்கு கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும். கடந்த தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் இதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை. நிதி நிலை மோசமமாக இருப்பதால் இப்போது சர்க்கரை வழங்க முடியாது என்று கூறி கோப்பை திருப்பி அனுப்பி விட்டார். இதனால் தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்கப்படவில்லை.   இப்போது பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பச்சரிசி உள்ளிட்ட 6 பொருட்கள் இலவசமாக வழங்குவது என்று அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்பை அவர் திருப்பி அனுப்பி விட்டார். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச பொருட்கள் வழங்க முடியாது. வேண்டுமானால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள சிவப்பு ரேஷன் கார்டு தராரர்களுக்கு இவற்றை வழங்கலாம் என்று கூறி உள்ளார். இதனால் இந்த தடவை அனைத்து கார்டுதாரர்களுக்கம் பொங்கல் இலவச பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு;ளது.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8  நாட்களே  உள்ளது.  கவர்னரை சமரசம் செய்து அரசு அனைத்து கார்டுகளுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்குமா? அல்லது தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரை வழங்காதது போல பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இலவச பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்தள்ளது. தமிழ்நாட்டின் உள்பகுதியில் அமைந்தள்ள புதுவையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் அது மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. புதுவையில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. அதை வழங்குவதற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் கவர்னர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்க முடியாது என்று கூறி விட்டார். எனவே புதுவையில் இலவச அரிசி வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத் தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து