முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துள் இயக்கப்படுவது குறித்து கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்தில் எவ்வித சிரமமும் இன்றி அனைத்து வழித்தடங்களிலும் அரசு பேருந்துகளை இயக்கப்படுவதை, விழுப்புரம், அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்களை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர்  இன்று (05.01.2018) விழுப்புரம் அரசு பேருந்து பணிமனை-2, மற்றும் அரசு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.போக்குவரத்து பணிமணை மேலாளர்களிடம் இன்று இயக்கப்பட்ட, பேருந்துகளின் எண்ணிக்கையையும், பேருந்துகளின் வழித்தட விவரங்களையும் கேட்டறிந்து, அனைத்து பேருந்துகளையும் இயக்க மாற்று ஏற்பாடாக, போக்குவரத்துத்துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் தகுதியான, அனுபவமிக்க தனியார் பேருந்து ஓட்டுநர்களை பயன்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக துரித நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் .சரஸ்வதி, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், விழுப்புரம் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் டைசன், துணை மேலாளர் (வணிகம்) செல்வகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து