முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டவுன் முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் -அவுட் இந்தியா 27 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறல்

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன்: கேப்டவுன் முதல் டெஸ்ட் போட்டியில் புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்க அணி சார்பில் டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 65 ரன்களும், டு பிளிசிஸ் 62 ரன்களும் எடுத்தனர். புவனேஷ்குமார் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பேட்டிங் தேர்வு
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அறிமுகமானார். ரகானே நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தில் டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

புவனேஸ்வர் குமார்...
புதுப்பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அசத்தினார். 3-வது ஓவரின் கடைசி பந்தில் மார்கிராமை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஹசிம் அம்லாவை 3 ரன்னில் வெளியேற்றினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். டு பிளிசிஸ் நிதானமாக விளையாட டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய 9-வது ஓவரில் டி வில்லியர்ஸ் நான்கு பவுண்டரிகள் விரட்டினார். நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

டி வில்லியர்ஸ்...
14.1 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்கவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 59 ரன்களுடனும், டு பிளிசிஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின் டிவில்லியர்ஸ் 65 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் கலக்கி வரும் ஜஸ்பிரித் பும்ரா முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

இந்தியா
ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரோகித் சர்மா, சகா (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், முகம்மது சமி, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா

தென் ஆப்பிரிக்கா
டீன் எல்கர்,  எய்டன் மார்க்ராம், அம்லா, டி வில்லியர்ஸ்,  டு பிளஸிஸ் (கேப்டன்) குயிண்டன் டி காக் (கீப்பர்), வெர்னன் பிளாண்டர், கேஷவ் மஹராஜ், டேல் ஸ்டைன், காகிசோ ரபாடா, மோர்னே மார்கல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து