சபரிமலை கோவில் வருமானம் ரூ. 203 கோடி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      ஆன்மிகம்
Sabarimalai barcode 2017 11 20

Source: provided

திருவனந்தபுரம் :  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் நடை கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சபரிமலை கோவிலுக்கு வருமானமும் அதிகரித்துள்ளது.

நடை திறந்த 6 நாட்களில் மட்டும் ரூ. 29 கோடியே 69 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. மண்டல பூஜையின் போது கிடைத்த வருமானத்தையும் சேர்த்தால் இதுவரை ரூ. 203 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ. 175 கோடி வருமானம்தான் கிடைத்திருந்தது.

மகர விளக்கு பூஜையின் போது பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் கோவிலின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகர விளக்கு பூஜை நெருங்குவதால் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க சபரிமலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து