முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி மதுரை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பரிசுகள் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை மாநகராட்சி  தூய்மைக்கான கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு தி மதுரை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,   தலைமையில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்கே ராஜூ பரிசுகள் வழங்கினார்.
 மதுரை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில்  தூய்மைக்கான கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மதுரை மாநகராட்சியுடன் தேவதாஸ் மருத்துவமனை இணைந்து தி மதுரை மாரத்தான் போட்டி ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் முதல் கள்ளந்திரி வல்லபாய் படேல் பள்ளி வரையிலும் 21 கி.மீ. தூரத்திற்கும்,  பெண்களுக்கு ரேஸ்கோர்ஸ் முதல் கடச்சனேந்தல் காதக்கிணறு வரையிலும் 12 கி.மீ. தூரத்திற்கும், சிறார்களுக்கு ரேஸ்கோர்ஸ் முதல் புதூர் தேவதாஸ் மருத்துவமனை வரையிலும் 5 கி.மீ. தூரத்திற்கும் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மகளிரும், சிறார்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 21 கி.மீ. தூரத்திற்க்கான மாரத்தான் போட்டியில் முழுவதுமாக பங்கேற்றார்.
மதுரை மாநகராட்சி ளுறயஉhh ளுரசஎநமளாயn 2018 தூய்மைக்கான கணக்கெடுப்பில் மதுரை மாநகராட்சி முதல் இடம் பெற பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறும், குப்பைகளை குப்பை கூடைகளில் மட்டுமே போடுமாறும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறும், எனது நகரத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வேன் என உறுதி ஏற்குமாறும் அனைவரும் பேசும்போது தெரிவித்தனர். சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற நவீன் பிரசாத், இரண்டாம் இடம் நித்தீஷ் ராம், மூன்றாம் இடம் ராகேஷ், மகளிருக்கான மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற சௌமியா, இரண்டாம் இடம் கீதா, மூன்றாம் இடம் அஷ்வியா, ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதலிடம் நாகேஷ், இரண்டாம் இடம் மணிகண்டன், மூன்றாம் இடம் ஜோஸ் ஆகியோருக்கு ரொக்கப்பரிசாக ரூ.2 லட்சம் வரையிலும் மேலும் பரிசுப்பொருட்களாக  எல்.இ.டி. டி.வி., ஸ்மாhட் போன், சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டது. 
முன்னதாக மாரத்தான் போட்டியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா அவர்கள், மதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ்,   கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபால கிருஷ்ணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் முகம்மது ரசூல்,  சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன், தேவதாஸ் மருத்துவமனை சேர்மன் மரு.ஏ.தேவதாஸ், இயக்குநர் மரு.சதிஷ்தேவதாஸ், நிர்வாக இயக்குனர் மரு.ஹேமா சதிஷ், மக்கள் தொடர்பு அலுவலர் கண்ணன், உட்பட பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள், சிறார்கள் பலர்; கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து