முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியிலும், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.புரத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  நடைபெற்ற அரசு விழாக்களில்,   தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்   தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினையும், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,    முன்னிiயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள்.
விழாக்களில்   தமிழ்நாடு துணை முதலமைச்சர்   தெரிவிக்கையில்,   புரட்சித்தலைவி அம்மா   காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், விலையில்லா அரிசி பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக்கரும்புத்துண்டு-1, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1983-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பினை வழங்கி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து   புரட்சித்தலைவி அம்மா   காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், ஆண்டுந்தோறும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம் ஆகிய 5 வட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற 401 முழு நேர நியாய விலைக்கடைகள், 91 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்ப்பட்டு வருகின்ற 21 முழு நேர நியாய விலைக்கடைகள் மூலம் 3,80,202 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலா ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வீதம் 3,80,202 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையும், 7,604 கிலோ முந்திரியும், 7,604 கிலோ உலர் திராட்சையும், 1,901 கிலோ ஏலக்காயும், 3,80,202 கரும்புத்துண்டுகளும் ஓதுக்கீடு செய்யப்பட்டு (13.01.2018) வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி வட்டத்தில் 54,949 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு வேட்டி, ஒரு சேலை வீதம் 1,09,898 வேட்டி, சேலைகளும், பெரியகுளம் வட்டத்தில் 63,841 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,27,682 வேட்டி, சேலைகளும், ஆண்டிபட்டி வட்டத்தில் 69,745 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,39,490 வேட்டி, சேலைகளும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 56,895 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,13,790 வேட்டி, சேலைகளும், உத்தமபாளையம் வட்டத்தில் 1,29,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,58,874 வேட்டி, சேலைகளும் என மொத்தம் 3,74,867 குடும்ப அட்டைதாரர்களுக்கு 7,49,734 வேட்டிகள், சேலைகள் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் இத்திட்டங்களை கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சீரோடும், சிறப்போடும் கொண்டாடிட எனது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என   தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம்   தெரிவித்தார்.
இவ்விழாக்களில், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  .ஆர்.பார்த்திபன்  , கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.கே.ஜக்கையன்  ,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து