திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கனிணிகள் : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      திருவாரூர்
pro thiruvarur

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 2076 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்து 80 ஆயரத்து 120 மதிப்பிலான விலையில்லா மடிக்கனிணிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் . தலைமை வகித்தார்.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவதுமறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட உண்ணத திட்டம் தான் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கனிணிகள் வழங்கும் திட்டம்.இத்திட்டத்தின் கீழ் ஏழை, எளிய சாதாரண வீட்டு பிள்ளைகளும் பயன்பெற்று வருகிறார்கள்.\

12 பள்ளிகள்

மாணவ,மாணவிகள் அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் க~;டங்களை மறந்துவிட வேண்டும்.அவற்றின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக்கூடாது. மேலும் இன்றைக்கு படிக்கும் பாடங்களைவிட சிறந்தது எதுவும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் தான் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் ஆகியவற்றை ஒருங்கிணைப்படுத்த வேண்டும். இயலாது என்பதைவிட முடியும் என்ற தாரக மந்திரத்தை வாழ்க்கையில் ஏற்று வெற்றி பெற வேண்டும். மடிக்கனிணிகளை கொண்டு பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாததை பார்த்து வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ள கூடாது.தேவை உள்ளதை மட்டுமே பார்த்து கல்வி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். இன்றயைதினம் 12 பள்ளிகளைச் சேர்ந்த 2076 மாணவ,மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரத்து 120 மதிப்பிலான விலையில்லா மடிக்கனிணிகள் வழங்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு வழங்கப்படும் மடிக்கனிணியின் விலையானது ரூ.12 ஆயிரத்து 370 ஆகும். இத்திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை,எளிய மாணவச்செல்வங்கள் உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் என்ற புதிய உலகத்தினை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, முதன்மை கல்வி அலுவலர் கோ.தனமணி, வேளாண் இணை இயக்குநர் மயில்வாகணன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் , தலைமையாசிரியர் இராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து