நாகப்பட்டினம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் : அமைச்சர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்

பொங்கல் பரிசு

 கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களையும், குன்னம்; ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களையும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். பள்ளி வகுப்பறைக் கட்டிடங்களைத் திறந்து வைத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, " மறைந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் 14 வகையான உபகரணங்கள் மற்றும் ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் போன்ற பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் நகர்ப்புறத்தில் உயர்ந்தும், கிராமப்புறத்தில் குறைந்தும் இருப்பதுபோல் ஒரு தோற்றம் இருந்தது. புரட்சித் தலைவி அம்மா வழியில் தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித் தரம் மேம்படும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அதன் விளைவாக இன்று கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களை மிஞ்சும் அளவிற்கு கல்வித் தரம் உயர்ந்து காணப்படுகிறது. மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்று இல்லாமல், நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்றால் தான், இன்றைய போட்டி நிறைந்த உலகில் முன்னேற்றப் பாதையில் நடை போட முடியும். கண்டிப்பாக நம் மாணவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது.

அதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சாதாரண மனிதன் கூட முயற்சி செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும். மாணவர்களாகிய நீங்களும் முயற்சி எடுத்து படித்தால், அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும். விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். எனவே மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கவேண்டும். மக்கள் தொகையில் ஆண், பெண் என இருபாலரும் உள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா வகையிலும் உயர்ந்திருக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில், புரட்சித்தலைவி அம்மா அவர்களது வழிகாட்டுதலின் படி தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் கோரிக்கை வைக்காமலேயே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாயாரின் பெயரை தம் பெயரின் முதலெழுத்தாக வைத்துக் கொள்;ளுதல், அரசுக் கடிதத்தில் "இந்தியக் குடிமகள்" என்று எழுதும் முறை போன்றவை தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்தை பறைசாற்றுபவையாகும். அன்னைத் தெரசா புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இல்லத்திற்கே சென்று பாராட்டிய திட்டம் தான் தொட்டில் குழந்தை திட்டம்ஆகும். ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தாமல் பட்டமேற்படிப்பு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

இந்த கல்வி வளர்ச்சியானது நமது தமிழ்நாட்டிற்;கும,; இந்திய திருநாட்டிற்;கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் மாற்றமில்லை. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.25,000-ம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.50000 ம் வழங்கப்பட்டு வந்தது. புரட்சித் தலைவி அம்மா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல திருமங்கல்யத்திற்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயத்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும். ஏழை, எளிய சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது." என தெரிவித்தார்.

முன்னதாக குன்னம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் 2018- சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இக்கட்டிடங்களின் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து