சேவாலயாவில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      திருவள்ளூர்

திருவள்ளுர் அடுத்த கசுவா கிராமத்திலுள்ள சேவாலயா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா நடைபெற்றது.

 விழாவில் சிறப்பு விருந்தினராக கிரி வர்த்தகம் இயக்குநர் டி.எஸ்.ரங்கநாதன் பங்கேற்று பேசுகையில் சங்கீதம் எனபது எல்லோருக்கும் பொதுவானது.அது எந்த இன,மத,மொழிகளுக்கும் சொந்தமில்லை.பின் தங்கிய கிராம மக்கள் இதுபோன்ற கர்நாடக சங்கீதம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது என நினைக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறானது எனபதை சேவாலயா குழந்தைகள் மெய்ப்பித்து காட்டிவிட்டனர்.மிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து சேவாலயா பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு சங்கீத ஞானத்தை கொடுக்க வேண்டும் என எண்ணி அதை மெய்ப்பித்து காட்டிவரும் சேவாலயா அறக்கட்டளைக்கு எனது மனமார்ந்த நன்றி என கூறினார்.

ஆராதனை விழா

எங்கும் எல்லாம் வல்ல இறைவன் இருப்பது போல எல்லோரது உள்ளங்களிலும்,உணர்ச்சியிலும் சங்கீதம் இருக்கிறது என கூறினார்.மேலும் குழந்தைகளிடம் கைத்தட்டல் மூலமாக ஏழு சுவரங்களை கற்றுக்கொடுத்தார். முக்கியமான ஐந்து கீர்த்தனங்களின் ராகங்களை பாடிக்காட்டி குழந்தைகளை உற்சாகம் கொள்ள வைத்தார்.முன்னதாக சேவாலயா பள்ளியில் பயிலும் பாட்டு வகுப்பு மாணவிகளின் நடனமும்,பாடலும் கலந்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை தொடர்பான போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

இதில் 10 பள்ளிகளில் இருந்து 30 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.அதிலிருந்து சிறந்த பாடல்களை பாடிய மூவருக்கும்,குழுவுடன் இணைந்து சிறப்பாக பாடிய மூன்று குழுவினருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சேவாலயா நிறுவனர் வி.முரளிதரன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.சேவாலயா வளாக பொருப்பாளர் கிங்க்ஸ்டன் விழா நிறைவாக நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து