பொன்னேரியில் 275 பயனாளிகளுக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      சென்னை
P neri 1

பொன்னேரி வட்டம்,மீஞ்சூர்,சோழவரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 275 பயனாளிகளுக்கு தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கும் விழா மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

 திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் பயனாளிகளுக்கு இதனை வழங்கினர். திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுல் ஒன்றான தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கும் விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா வரவேற்புரையாற்றினார்.மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன்,ராஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டம்,பட்டயம்,பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயின்று திருமணம் செய்துக் கொண்ட பெண்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் மூலம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கும்,சோழவரம் ஒன்றியத்தில் 175 பயனாளிகளுக்கும் மொத்தம் 275 பயனாளிகளுக்கு 2200 கிராமில் 275 சவரனில் 95 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் சேர்மன்கள் கலைச்செல்வி மோகனவடிவேல்,கார்மேகம்,துணைச்சேர்மன் சுமித்ராகுமார் உள்ளாட்சிபிரதிநிதிகள் பானுபிரசாத்,பத்மஜா ஜனார்தனம்,பொன்னுதுரை,எம்.வி.சுந்தரம்,கோளூர் கோதண்டன், .கே.பூபாஷா, அனுப்பம்பட்டு சார்லஸ், நாலூர் முத்துகுமார் உள்ளிட்ட பலர் இதில் உடனிருந்தனர்.சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பா நன்றிக் கூறினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து