தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      திருநெல்வேலி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16வது ஆண்டு விழா நடைபெற்றது

ஆண்டு விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஓய்வுபெற்ற பதிவாளர் நீதிபதி எஸ்.உதயன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன், தலைமையாசியரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஆயிஷா மகிரா வரவேற்றுப் பேசினார். ராஜாமணி பிரார்;த்தனை செய்தார். மாணவி ஈவ்லின் செசிகா பள்ளி வரலாறு பற்றி கூறினார். மாணவிகள் நூருல் பாத்திமா, பிரியதர்ஷினி, அஸ்மா ஷம் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.உதயன், மீனாட்சி சுந்தரம், பாண்டுரங்கன் ஆகியோர்   பரிசு வழங்கி பாராட்டி பேசினர். சட்டக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முகம்மது, பேராசிரியை அனார்கலி, நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மதுரை சீனிவாசன், ஆசிரியை மேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மிராக்ளின் பால்சுசி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் பரதம், நாடகம், நடனம், பாட்டு, நகைச்சுவை, கவிதை, பிரமிட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை மாணவர்கள் ஹரீஸ், சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவி முடிவில் மாணவி ஜமுனா பாத்திமா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து