முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், “ ஷேப்இட்” புத்தக வெளியீட்டு விழா!

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- ஸ்ரீவி.  கலசலிங்கம்  நிகர்நிலைப்பல்கலையில்,   கார்பரேட்  வேலைவாய்ப்புத்துறை  சார்பில்  பெங்களுர் ஐபிஎம் கம்பெனி  துணைத்தலைவர்  முனைவர்  சுப்பிரமணி மற்றும்  எஸ். வைஜெயந்தி ஆகியோர்  எழுதிய    “ ஷேப்இட்” புத்தக வெளியீட்டு விழா பல்கலைத்துணைத்தலைவர்  முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார்.
ஐபிஎம் துணைத்தலைவர் எழுதிய “ ஷேப்இட்” புத்தகத்தை  பல்கலை துணைத்தலைவர்  வெளியிட முதல் பிரதியை  துணைவேந்தர் முனைவர் எஸ்.  சரவணசங்கர் பெற்றுக்கொண்டார்.
விழாவில்  ஐ டி சி கம்பெனி  மேலாளர்கள் குமார்கங்குவானி,  நரேஷ்,  ரேபார்ட் போச் கம்பெனி மேலாளர் குமார்ராஜாமணி,  சுவிட் ஷர்லாந்து  ஆராய்ச்சியாளர்கள்  கிறிஸ்டினா,  ரோஷனா, கார்பரேட்  இயக்குநர்  முனைவர் அலாவுதீன்  ஆகியோர்  கலந்துகொண்டு  புத்தகத்தைப்பெற்று  வாழ்த்துரை வழங்கினர்.
புத்தகம் எழுதிய  ஐபிஎம் துணைத்தலைவர்  பேசுகையில்,  “எஸ்”;; என்பது  தாமே  படித்து புரிந்துகொள்ளுதல்,    “ஹெச்”; என்பது  செய்முறையில் திறமை வளர்ச்சி, “எ“ என்பது  ஆன்டனா போல  மேல்மாடிகளில்  பரந்து திரிந்து மாற்றங்களை கண்டு அறிதல், “பி” என்பது  பிரிச்சனைகளை தீர்க்கும்  யுக்திகளை  வளர்ப்பது, “இ“ என்பது பொறியாளர் ஆகுவதை விட சுயதொழில் முனைவோராக ஆகுவது  எப்படி  இந்த நான்கைப்பற்றிதான்  இந்தப்புத்தகத்தின்  மையக்கருத்தாகும் என்று  கூறினார்.
மேலும்,  நிரூபர்கள் கேள்விக்களுக்கு  பதில் அளிக்கையில்  அமெரிக்காவைப்போல  இன்னும் சீனா,  மற்றும் ஐரோப்பியா  நாடுகளில்  இந்தியக்கணிப்பொறி வல்லுநர்களுக்கு  வாய்ப்புக்கள்  அதிகம்  இருந்தாலும்  நம்மவர்கள் அந்தந்த நாட்டு மொழிகளைத்தான்  கற்றுக்கொண்டு  செல்லவேண்டியுள்ளது.  என்றார்.
18ம் நூற்றாண்டில்  ஒரு  தரைவழி  தொலைபேசி  கனெக்ஷன் கொடுப்பதற்கு  எட்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும் ஆனால் இப்பொழுது  கைப்பேசி  கனெக்ஷன் எட்டு வினாடிகளுக்குள்  எல்லா இடங்களிலும் கொடுத்துவிடும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,  கைபேசி முதலில் பயன்பாட்டுக்கு வந்தபோது வரும் அழைப்பை பேசுவதற்கு கட்டணத்தை முப்பது வினாடிக்கு  16ரூபாய் ஆகும்.   தற்பொழுது மூன்று மாதத்திற்கு  ரூபாய்  300க்கு பேசும் அளவிற்கு  மாற்றம்  அடைந்துள்ளது.  இருப்பினும்  “மிஸ்டுகால்“  முறையை கண்டுபிடித்து  வணிகத்துறையை வளர்ச்சி யடைச்செய்தது இந்திய  கணினி வல்லுநர்கள் ஆகும்.  அதற்காக 30 மில்;லியன் டாலர் பரிசும் பெற்றார்கள்.  ஐபிஎம் கம்பெனிதான்  அனைத்து  கணினி வளர்ச்;சிக்கும்  கம்பெனிகள் வளர்ச்சிக்கும் அன்று முதல் இன்று  “விக்கிபீடியா”  போன்ற  வளர்ச்சிக்கும் காரணமாகும் என்று  கூறினார்.
கலசலிங்கம்  பல்கலை  500 பிரதிகளை பெற்று  மைய நூலகத்தில்  மாணவர்கள்  அனைவரும்  படிப்பதற்கு  ஏற்பாடு செய்ததை  பாராட்டினார்.  இந்த வெளியீட்டு விழாவில்  வெளிநாட்டு ஆராய்;ச்சியாளர்களும் கலந்துகொண்டது  இந்தப்புத்தகத்தை பெற்றுக்கொண்ட உடன்  அரைமணி நேரத்தில்  புத்தகத்தின் பாதியை படித்து முடித்து வாழ்த்துரை வழங்கியதை  எஸ். வைஜெயந்தி பாராட்டினார்.
எஸ். வைஜெயந்தி பேசுகையில்,  பல்கலைக்கழகம்  சயின்ஸ்,  டெக்னாலஜி,  சொசைட்டி,  இயற்கைப்பாதுகாப்பு  இந்த நான்கிலும்  சதுர மூலைகளைப்போல கவனமாக பொறுப்பேற்று  இயங்கினால்  பொறியாளர்கள்  சிறந்த  வல்லுநர்களாக வருவார்கள் என்று கூறினார்.
பல்கலை துணைவேந்தர்  நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை கார்பரேட் பேராசிரியர்கள்,  வேல்முருகன்,  நிஷா,  புருஷோத்தமன்,  கலைச்செல்வி   ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தார்கள்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து