நடிகர் சூர்யா பட வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு இன்று ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      சினிமா
Thaana Serndha Koottam 2018 1 9

சென்னை : நடிகர் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு டப்பிங்கை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று ஒத்திவைத்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை வெளியிட தடை கோரி நடிகர் பிரசாந்தின் தாய் சாந்தி உரிமையாளராக உள்ள ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் சாந்தி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர், கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக கூறி தடை கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சாந்தி தியாகராஜன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தியில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளின் ரீமேக் உரிமையை தான் பெற்றுள்ளதாகவும், அவற்றில் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை மட்டும் ஆர்.பி.பி. நிறுவனத்துக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆர்.பி.பி. நிறுவனத்திடம் படத்தை உரிமம் பெற்ற ஞானவேல்ராஜா, ஒரு மொழியில் ரீமேக் செய்துவிட்டு, மற்றொரு மொழியில் மொழிமாற்றம் செய்வதாக தெரிவித்தனர். தமிழில் தங்கள் பெயருடன் வெளியிட ஆட்சேபனை இல்லை என்றும், தெலுங்கு சப்-டைட்டிலுடன் வேண்டுமானால் தமிழ் பதிப்பை வெளியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், படத்தின் இரு மொழிகளின் ரிமேக் உரிமையை பெற்ற தங்களுக்கு அதை வேறு மொழியில் டப்பிங் செய்ய உரிமை உள்ளதாகவும், அதனடிப்படையில் தான் தமிழில் ரீமேக் செய்துவிட்டு அதிலிருந்துதான் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளதாகவும், 'ஸ்பெஷல் 26' படத்தை டப்பிங் செய்தால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

Kolamavu Kokila(CoCo) Movie Review | Nayanthara | Yohi babu | Anirudh | Nelson

World's ugliest pug!! See for yourself!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து