உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22 ம் தேதி சுவிட்சர்லாந்து பயணம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      இந்தியா
pm modi 2017 12 31

புதுடெல்லி : சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டோவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற 22 ம் தேதி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சுவிட்சர்லாந்து செல்கிறார். அங்கு மாநாட்டில் உரையாற்றுகிறார்.

உலக பொருளாதார மாநாட்டில்  20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. 1997 தேவகொளடா பிரதமராக இருந்தபோது  நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடிதான் இபேபோது நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார் இ ந்த மாநாட்டிற்கு உலக முழுவதும் இருந்து 3 ஆயிரம் தலைவர்கள், பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

பிரதமர் மோடியுடன், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி,பியூஸ் கோயல்,சுரேஷ் பிரவு, தர்மேந்திர பிரதான், எம்.ஜே. அக்பர், ஜிஜேந்திர சிங் ,மற்றும் 2 மாநில முதல் அமைச்சர்கள், பல்வேறு நிறுவனங்களின் 100 தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இந்த சுவிட்சர்லாந்து பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் அலைன் பெர்சட்டையும் சந்தித்து பேசுகிறார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து