ஆண்டாள் குறித்த தவறான கருத்து வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      சினிமா
vairamuthu 2017 4 9

சென்னை : கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்மறையான விமரிசனங்கள் எழுந்தன. ஆண்டாள் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரும் வைரமுத்துவின் கட்டுரை குறித்து கருத்துக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழை ஆண்டாள் கட்டுரை யார் மனதையாவது புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று வைரமுத்து மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கூறியிருப்பதாவது:

தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து