இலவச பொங்கல் பொருட்கள் வழங்காததை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் புதுவை சட்டசபை வளாகத்தில் திடீர் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      புதுச்சேரி
puthuvai admk mla tharna

புதுவை அரசு சார்பில் பண்டிகை காலங்களில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும். தீபாவளிக்கு 2 கிலோ இலவச சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கு 6 பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்திருந்தார். இதற்காக அரசு சார்பில் கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கோப்பை தலைமை செயலாளர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச பொருட்கள் வழங்கினால் போதும் என்று குறிப்பிட்டு திருப்பி அனுப்பினார்.

பொங்கல் பொருட்கள்

இதையடுத்து அரசு சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை பண்டிகை காலங்களில ;வழங்கப்படும் இலவச பொருட்களை அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்பு நிதித்துறையிடம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு இலவச பொருட்கள் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் இருந்து அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் மற்றும் அசானா ஆகியோர் சட்டமன்ற நுழைவு வாயிலுக்கு வந்தனர். அங்கு இலவச பொருட்கள் வழங்காததற்காக அரசையும், கவர்னரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் நுழைவு வாயிலை இழுத்து மூடி விட்டு சட்டசபை வளாகத்தில் மைய மண்டபத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்கே? எங்கே? கவர்னரின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாதாந்திர இலவச அரிசி எங்கே? இலவச துணி எங்கே? இலவச பொங்கல் பொருட்;கள் எங்கே? என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்திய படி தர்ணாவில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய எம்எல்ஏக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் காலை 11.30 மணியளவில் காரில் சட்டசபைக்கு வந்தார். அவர் போராட்டம் நடத்திய எம்எல்ஏக்களிடம் இது குறித்து தன்னிடம் பேச வருமாறு அழைத்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தை கைவிட்டு சபநாயகர் அறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சாநாயகருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிமுக எம்எல்ஏக்களின் இந்த திடீர் போராட்டத்தால் நேற்று காலை புதுவை சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து